தபால் பெட்டி தேவை 

சென்னை-1,  தாதா முத்தியப்பன் தெரு-ஆச்சாரப்பன் தெரு சந்திப்பு அருகே உள்ள மாநகராட்சி கட்டடம், அரசு கிளை நூலகத்தின் முன் வைக்கப்பட்டிருந்த  தபால் பெட்டி சிதிலமடைந்த காரணத்தால்,  தபால் துறையினர் அகற்றி இர


சென்னை-1,  தாதா முத்தியப்பன் தெரு-ஆச்சாரப்பன் தெரு சந்திப்பு அருகே உள்ள மாநகராட்சி கட்டடம், அரசு கிளை நூலகத்தின் முன் வைக்கப்பட்டிருந்த  தபால் பெட்டி சிதிலமடைந்த காரணத்தால்,  தபால் துறையினர் அகற்றி இரண்டு மாதங்களாகியும், புதிய தபால் பெட்டி இன்னும் வைக்கப்படவில்லை. இதனால், அப்பகுதியில் உள்ள வணிகர்களும், பொதுமக்களும், நூலகத்திற்கு வரும் வாசகர்களும் தபால் அனுப்ப முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, விரைவில் புதிய தபால் பெட்டியை வைக்க தபால் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

காந்தி பாரதி, சென்னை-1. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com