கழிப்பறை தேவை
By DIN | Published On : 01st July 2019 03:34 AM | Last Updated : 01st July 2019 03:34 AM | அ+அ அ- |

சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் பகுதியில் பெரிய மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு தினமும் சுமார் ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். ஆனால், காய்கனிகளை வாங்க வரும் பெண்கள் உள்ளிட்டோருக்குத் தேவையான கழிப்பறை வசதி இல்லை. எனவே, இந்தப் பகுதியில் உடனடியாக பசுமைக் கழிப்பறைகளை அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.கிறிஸ்டி,
விம்கோ நகர்.