சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் 99}ஆவது வட்டத்தில் அமைந்துள்ள எஸ்.பி.ஐ.ஓ.ஏ. பள்ளி வளாகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் அடிக்கடி பழுதடைந்துவிடுகிறது. இதனால், அருகிலுள்ள பார்க் ரோடு ஏடிஎம் அல்லது ப்ளூஸ்டார் ஏடிஎம் வரை செல்ல வேண்டியுள்ளது. மேலும், பணப் பரிமாற்றங்களைத் தவிர வங்கிக் கணக்கு புத்தகத்தில் பதிவிடுதல், பணம் அனுப்புதல் போன்ற தேவைகளுக்கும், வங்கியின் ஏடிஎம் மையங்களையே வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லட்சுமிபாய், அண்ணாநகர் மேற்கு.