பேருந்து தாமதம்
By DIN | Published on : 14th October 2019 03:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அம்பத்தூர் தொழிற்பேட்டை முதல் கிண்டி வழியாக வேளச்சேரி வரை இயக்கப்படும் டி70 பேருந்தானது, இரவு 9 மணிக்கு மேல் சரிவர இயக்கப்படுவதில்லை. அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், 9 மணிக்குப் பணி முடிந்து வீடு திரும்பும் பயணிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக விடுமுறை தினங்களில் இரண்டு மணி நேரம் வரை கூட காலதாமதமாகிறது. இதனால், பெண்கள் உள்ளிட்டோர் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனர். இந்தப் பிரச்னைக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் உரிய தீர்வு காண வேண்டும்.
பிரியதர்ஷினி, கிண்டி.