Enable Javscript for better performance
Garbage bins needed- Dinamani

சுடச்சுட

    


    சென்னை அம்பத்தூரை அடுத்த அயனம்பாக்கம் பகுதி தற்போது வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. திருவேற்காடு நகராட்சியில் உள்ள இப்பகுதியில் ஏராளமான மக்கள் குடியேறி வருகின்றனர். மேலும் ஏராளமான தொழிற்சாலைகளும் இயங்கி வரும் நிலையில், குப்பைகளும் அதிகரித்து வருகின்றன. ஆனால், இப்பகுதியில் போதுமான குப்பை தொட்டிகள் அமைக்கப்படாததால், சாலையிலும்,அருகிலுள்ள ஏரியிலும் குப்பைகளை வீசும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தற்போது மழைக்காலத்தில் கொசுக்களும், ஈசல் பூச்சிகளும் பெருகி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில் தேவையான குப்பைத் தொட்டிகளை அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ச.விஸ்வேஸ்வரன், அயனம்பாக்கம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai