ரயில்வே நிர்வாகம் கவனிக்குமா?

தாம்பரத்தில் இருந்து ஆவடி, பொன்னேரி வரை செல்லும் மின்சார ரயில்களில் செல்வோர் தினமும் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் இறங்கி, பிறகு சென்னை புறநகர் ரயில் நிலையத்தை அடைகிறார்கள்.

தாம்பரத்தில் இருந்து ஆவடி, பொன்னேரி வரை செல்லும் மின்சார ரயில்களில் செல்வோர் தினமும் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் இறங்கி, பிறகு சென்னை புறநகர் ரயில் நிலையத்தை அடைகிறார்கள். திரும்பி வரும்போதும் இதே நிலை. இதனால் முதியோர், பெண்கள், குழந்தைகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சென்னை புறநகர் ரயில் நிலையம், பூங்கா நகர் (வேளச்சேரி செல்லும் நிலையம்), பூங்கா நகர் (தாம்பரம் செல்லும் நிலையம்), சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆகியவற்றை வட்ட வடிவில் கன்வேயர் பெல்ட், எஸ்கலேட்டர் மூலம் இணைத்தால், மேற்படி பயணம் இலகுவாக இருக்கும். ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 சி.உஷாராணி, காலடிபேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com