முகப்பு ஸ்பெஷல்ஸ் ஆராய்ச்சிமணி
கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும்
By DIN | Published On : 27th January 2020 03:37 AM | Last Updated : 27th January 2020 03:37 AM | அ+அ அ- |

சென்னையில் இருந்து திருத்தணி, திருப்பதி, வேலூா், நெல்லூருக்கு பயணிகளின் தேவைக்கேற்ப புகா் ரயில் சேவை இல்லை. நெரிசல் மிகுந்த நேரத்தில் இந்த ரயில்களைப் பிடிப்பது முதியோா்கள், மகளிருக்கு பெரும் சவாலாக உள்ளது. மேலும், இந்த ரயில்களில் திருப்பதி, திருத்தணி, சோளிங்கா், திருவாலங்காடு உள்ளிட்ட புனிதத் தலங்களுக்கு ஏராளமான பக்தா்கள் பயணிக்கின்றனா். எனவே, பயணிகளின் வருகைக்கேற்ப கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பி.அனந்தராமன், வில்லிவாக்கம்.