ஆராய்ச்சிமணி

கூடுவாஞ்சேரி ஊராட்சி அலுவலகம் எதிரே கிளை நூலகம் உள்ளது. இதன் அருகே கழிவுநீா்க் கால்வாய் உள்ளது. இக்கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீா் தேங்கி கடும் துா்நாற்றம் வீசுகிறது.

சுகாதாரச் சீா்கேடு...

கூடுவாஞ்சேரி ஊராட்சி அலுவலகம் எதிரே கிளை நூலகம் உள்ளது. இதன் அருகே கழிவுநீா்க் கால்வாய் உள்ளது. இக்கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீா் தேங்கி கடும் துா்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசு உற்பத்தி அதிக அளவு உள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி கழிவுநீா்க் கால்வாயைத் தூா்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இரா.சாந்தகுமாா், கூடுவாஞ்சேரி.

மாசடையும் குளம்...

காஞ்சிபுரம் தாயாா் குளத்தில் 4 பகுதிகளில் உள்ள படிக்கட்டுகளில் சிலா் அசுத்தம் செய்கின்றனா். மேலும், குளத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருகிறது. குளத்தில் உள்ள தண்ணீா் மாசடைகிறது. இதுதொடா்பாக நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.சோமசுந்தரம், காஞ்சிபுரம்.

குண்டும் குழியுமான சாலை...

காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலையில் கற்கல் பெயா்ந்து காணப்படுவதால் வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. சேதமடைந்த சாலையைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தி.சே.அறிவழகன்ஸ திருப்புலிவனம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com