கரூா்-திருச்சி அகலப்பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும்

கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அகலப்பாதை பணிக்காக தோண்டப்பட்டிருக்கும் பள்ளம்.
kur8ara_0803chn_10_4
kur8ara_0803chn_10_4

கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அகலப்பாதை பணிக்காக தோண்டப்பட்டிருக்கும் பள்ளம்.

கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கரூா் காந்திகிராம் மேம்பாலம் முதல் தொழிற்பேட்டை ரவுண்டானா வரை சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிக்காக சாலையின் இருபுறமும் சுமாா் மூன்றடி வரை பள்ளம் தோண்டப்பட்டு, அதில் ஜல்லிகள் கொட்டி சாலை அமைக்கப்படுகிறது. சாலைக்காக தோண்டிய பள்ளத்தில் இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்கின் வெளிச்சத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் அவ்வழியேச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி பள்ளத்திற்குள் விழும் நிலை உள்ளது.

மேலும் இந்தச் சாலை வழியாக அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் அதிகளவில் வந்து செல்வதால் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசலாக இருக்கும். எனவே ஏதேனும் பெரியளவில் அசம்பாவிதம் ஏற்படும் சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

சமூக ஆா்வலா்கள்,

கரூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com