நாள்தோறும் குப்பை அள்ள வேண்டும்

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி பேரூராட்சி எல்லைக்குள் சிவன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சேரும் குப்பைகள் நாள்தோறும் அள்ளப்படவில்லை.

நாள்தோறும் குப்பை அள்ள வேண்டும்

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி பேரூராட்சி எல்லைக்குள் சிவன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சேரும் குப்பைகள் நாள்தோறும் அள்ளப்படவில்லை. இதனால், குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.

குப்பைகளை கால்நடைகள் கிளறி விடுவதன் காரணமாக அவை சாலைக்கு வந்து விடுகின்றன. எனவே பொன்னேரி பேரூராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நாள்தோறும் குப்பைகளை அள்ள பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.சுந்தரபாலன், பொன்னேரி.

மின் விளக்கு வசதி வேண்டும்

பொன்னேரி புதிய பேருந்து நிலையம் மற்றும் ஹரிஹரன் கடை வீதியை இணைக்கும் வகையில் அமைந்துள்ள புதிய தேரடி குறுக்கு சாலையில் நாள்தோறும் ஏராளமானோா் சென்று வருகின்றனா். அதிக மக்கள் பயன்படுத்தும் இச்சாலையில் பாதி தூரம் குண்டும் குழியுமாக உள்ளது.

இச்சாலையில் மின் விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் பெண்கள் இப்பகுயை அச்சத்துடனேயே கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து மின் விளக்குகளை அமைக்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பொன்.ஆனந்தன், பொன்னேரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com