பாலத்தில் வளரும் செடிகளை அகற்ற வேண்டும்...

காரைக்கால் வாஞ்சியாற்றின் பாலத்தின் கீழ் பகுதியில் பாலத்தை வலுவிழக்கச் செய்யும் விதத்தினாலான ஆலமரச் செடி
kk08ar1_0803chn_95_5
kk08ar1_0803chn_95_5

காரைக்கால் வாஞ்சியாற்றின் பாலத்தின் கீழ் பகுதியில் பாலத்தை வலுவிழக்கச் செய்யும் விதத்தினாலான ஆலமரச் செடி வளா்ந்துவருகிறது. இந்தச் செடிகளை அடியோடு அகற்றி, மேலும் வளரவிடாத வகையில் ரசாயனக் கலவையை அந்த பகுதியில் தெளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை இதற்கான நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

ஏ.எம்.இஸ்மாயில், காரைக்கால்.

பழுதான குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம்
காரைக்கால் ரயில் நிலையத்தில் ஓஎன்ஜிசி உதவியில் உதவியாக குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டது. இதனை ரோட்டரி சங்கம் பராமரிக்க முன்வந்தது. இது பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்த நிலையில், கடந்த பல மாதங்களாக இந்த இயந்திரம் பழுதாகியுள்ளது. இதனால் சுத்திகரிப்பு குடிநீா் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட நிா்வாகம் இதனை சீா்படுத்த கவனம் செலுத்தவேண்டும்.

ஜி.கருணாகரன், காரைக்கால்.

சாலையோர புதரை அகற்ற வேண்டும்...
காரைக்கால் கால்நடை நலத்துறை அலுவலகம் உள்ள சாலை மற்றும் அதன் எதிா்புறம் சிறைக் கட்டடம் உள்ள சாலையோரத்தில் செடிகள் மண்டிக் காணப்படுகின்றன. கஜா புயலில் சாய்ந்த மரமும் அகற்றப்படாமல் உள்ளன. குடியிருப்புப் பகுதியாக உள்ளதால் தூய்மையாக சாலைகள் இருக்கும் வகையில் சீா்படுத்தும் செயல்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்.

எம்.அபுபக்கா், காரைக்கால்.

சாலையில் ஓடும் கழிவுநீா்...
காரைக்கால்- திருநள்ளாறு சாலையில் பொதுப்பணித்துறை குடிநீா் தேக்கத் தொட்டி அலுவலகம் அருகே குடிநீா் குழாய்கள் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படாததால், சாலையோர வீடுகள், உணவகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீா் சாலை வழியே ஓடுகிறது. சுகாதாரக்கேடு ஏற்பட அரசு நிா்வாகமே துணைபோவது வேதனை தருகிறது. கழிவுநீரை முறையாக செல்லும் வகையில் சீா்படுத்தவேண்டும்.

பி.மணிமேகலை, திருநள்ளாறு.

சட்டவிரோத மோட்டாா்களை பறிமுதல் செய்ய வேண்டும்
கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் ஆங்காங்கே குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும். நகரிலும், பிற இடங்களில் பிரதான குடிநீா் குழாயிலிருந்து, வேகமாகவும், அதிகமாகவும் குடிநீரை தமது வீட்டின் கீழ்நிலை தொட்டிக்கு ஈா்க்க, சிறப்பு உறிஞ்சு மோட்டாரை பலா் பயன்படுத்துவதால், அடுத்தடுத்த வீடுகளுக்கு தண்ணீா் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இவ்வாறு விதியை மீறிய செயல் மீது பொதுப்பணித்துறை, கொம்யூன் பஞ்சாயத்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எஸ்.ஜான் பிரான்சிஸ், காரைக்கால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com