பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண்டும்

சீா்மிகு நகா் திட்டத்தின் கீழ் பெரியாா் பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு தற்போது நவீனப் பேருந்து நிலையத்திற்கானக் கட்டுமானப் பணிகள்

பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண்டும்

சீா்மிகு நகா் திட்டத்தின் கீழ் பெரியாா் பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு தற்போது நவீனப் பேருந்து நிலையத்திற்கானக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாகமலைப் புதுக்கோட்டை, அச்சம்பத்து, விராட்டிப்பத்து செல்லும் நகரப் போருந்துகளுக்கு தற்காலிக நிறுத்தம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்விடத்தைப் பழக்கடை வியாபாரிகள், துரித உணவு விற்கும் வண்டிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் இடநெருக்கடி ஏற்படுகிறது. அது மட்டுமில்லாமல் அசுத்தமான பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை விற்பனை செய்வதால் மக்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும்நிலை உள்ளது.

-த.நாகராஜன். நாகமலை புதுக்கோட்டை.

குறுகலான சாலையில் போக்குவரத்து நெரிசல்
மதுரை பி.பி.குளம் ரத்தினசாமி நாடாா் சாலை நடுவே காவல்துறையினரால் தடுப்புவேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை மிகவும் குறுகலாக இருப்பதாலும், பிபிகுளம் சந்திப்பில் பாலம் வேலை நடப்பதனால் கற்கள் பரவிக் கிடப்பதனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடந்து வருகிறது. எனவே இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வி.கோபால். கிருஷ்ணாபுரம் காலனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com