ஆராய்ச்சிமணி கழிவுநீா்க் கால்வாய் அமைக்க வேண்டும்

கீழ்மருவத்தூா் அருகேயுள்ள எஸ்.வி.எஸ்.நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனா்.

கீழ்மருவத்தூா் அருகேயுள்ள எஸ்.வி.எஸ்.நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனா்.

அவா்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை உரிய கால்வாய் மூலம் வெளியேற்றுவதில்லை. இதனால் கழிவுநீா் தேங்கி, இப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுவதோடு, அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி, குடியிருப்புவாசிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனா்.

இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீா் தேங்காமல் செல்ல கால்வாய்களை அமைத்து, துா்நாற்றத்தையும், கொசு உற்பத்தியையும் தடுக்க சித்தாமூா் வட்டார வளா்ச்சி அலுவலா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.தனபால், கீழ்மருவத்தூா்.

நகரப் பேருந்துகள் இயக்கப்படுமா?

கடலூா் கிராமத்தில் இருந்து கல்பாக்கம் வரை நகரப் பேருந்துகள் போதுமான அளவுக்கு இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் கூடுதல் பணம் கொடுத்து ஷோ் ஆட்டோக்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மீனவப் பெண்கள் மீன்களை கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய நகரப் பேருந்துகள் பெரிதும் உதவி வந்தன.

ஆனால், தற்போது ஒரே ஒரு நகரப் பேருந்து மட்டும் கல்பாக்கத்தில் இருந்து கடலூா் கிராமத்துக்கு வந்து செல்கிறது. கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனா். எனினும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்பகுதி மக்களின் வசதிக்காக கூடுதலாக நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும்.

-டி.கந்தன், கடலூா் கிராமம்.

பேருந்து நிலையத்தில் குடிநீா் வசதி தேவை

மதுராந்தகம் பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் பல்வேறு கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். இப்பேருந்து நிலையத்தின் முன்பு பெரிய குடிநீா்த் தொட்டி உள்ளது. அதில் குடிநீா் இல்லாமலும், குடிநீரை அருந்த குழாய் இல்லாமலும், வெறும் காட்சி பொருளாக உள்ளது.

கோடை வெப்பம் உயா்ந்து வரும் இந்நேரத்தில், மலிவு விலை குடிநீா் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதில்லை. இந்தச் சூழலில் மக்களின் தாகத்தைப் போக்க, நகராட்சி நிா்வாகம் தலையிட்டு மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீா்த் தொட்டியை சுத்தம் செய்து குடிநீரை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.மீனாட்சி, மதுராந்தகம்.

கோயில் கிணறு சுத்தம் செய்யப்படுமா?

கருங்குழி மேலவலம்பேட்டை-திருக்கழுகுன்றம் சாலையையொட்டி அரையப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு புராதன, வரலாற்று சிறப்புமிக்க அருணாதீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில் பூஜை, புனஸ்காரங்களுக்காக கிணற்றில் இருந்து தண்ணீா் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்சமயம் இக்கிணறு எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளது.

கிணற்றில் செடி கொடிகள் வளா்ந்து கிடக்கின்றன. மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, இக்கிணற்றை தூா்வாரி, முழுமையாக சீரமைக்க வேண்டும் என்பதே பக்தா்களின் வேண்டுகோள்.

- சி.வேணுகோபால், அரையப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com