பகுதி - 329

பூமியும் பெரிய மேருமலையும் அதிரும்படியும்; ஆதிசேடனுடைய பணா மகுடங்கள் நடுங்கி அசையும்படியும்;

பதச் சேதம்

சொற் பொருள்

கடிய வேகம் மாறாத விரதர் சூதர் ஆபாதர் கலகமே செய் பாழ் மூடர் வினை வேடர்

கடியவேகம்: கடுமையான கோபம்; மாறாத விரதர்: கோபம் மாறாமல் அதையே விரதமாகக் கொண்டிருப்போர்; ஆபாதர்: கீழ்மக்கள்; வினைவேடர்: தீவினைகளையே நாடுவோர்;

கபட ஈனர் ஆகாத இயல்பு நாடியே நீடு கன விகாரமே பேசி நெறி பேணா

கபட: வஞ்சக; ஈனர்: இழிந்தோர்; ஆகாத இயல்பு: ஆகாத குணங்களை; நீடு: நெடிய; கன: வலிமையுள்ள; விகாரம்: அருவருப்பான;

கொடியன் ஏதும் ஓராது விரக சாலமே மூடு குடிலின் மேவியே நாளும் மடியாதே

ஓராது: ஆராயாது; விரக: ஆசை; சாலமே: ஜாலமே; குடில்: உடல்;

குலவு தோகை மீது ஆறு முகமும் வேலும் ஈராறு குவளை வாகும் நேர் காண வருவாயே

வாகு: புயம்;

படியினோடு மா மேரு அதிர வீசியே சேட பணமும் ஆடவே நீடு வரை சாடி

படி: பூமி; சேட: ஆதிசேடனுடைய; பணம்: மணியை உடையதாகிய படம்; நீடு வரை: நீண்ட, பெரிய மலை;

பரவை ஆழி நீர் மோத நிருதர் மாள வான் நாடு பதி அது ஆக வேல் ஏவும் மயில் வீரா

பரவை: கடல், பரந்த; ஆழி: கடல்; நிருதர்: அரக்கர்;

வடிவு உலாவி ஆகாசம் மிளிர் பலாவின் நீள் சோலை வனச வாவி பூ ஓடை வயலோடே

வடிவு உலாவி: அழகு விளங்கி; வனச(ம்): தாமரை; வாவி: குளம்;

மணி செய் மாட மா மேடை சிகரமோடு வாகு ஆன மயிலை மேவி வாழ் தேவர் பெருமாளே.

மணிசெய்: அழகுள்ள; சிகரம்: உச்சி, மாடங்களின் உச்சி;

கடிய வேக மாறாத விரத சூதர் ஆபாதர் ... மாறாத கடுமையான கோபத்தையே விரதமான உடைய வஞ்சகர்களும், கீழ்மையான குணமுள்ளவர்களும்;

கலக மேசெய் பாழ்மூடர் ... கலகத்தையே விளைவிக்கின்ற, பாழான அறிவிலிகளும்;

வினைவேடர் ... தீவினைகளேயே விரும்புபவர்களும்;

கபட ஈனர் ... வஞ்சனையுள்ளவகளும்; இழிந்த(வர்களுமான இவர்களுடைய),

ஆகாத இயல்பு நாடியே ...ஆகாத தன்மைகளையே விரும்பிக்கொண்டு,

நீடு கன விகாரமே பேசி ... பெரியதும் வலியதுமான அருவருக்கத் தக்கவற்றையே பேசி;

நெறி பேணாக் கொடியன் ... நல்ல நெறியைக் கடைப்பிடிக்காதவனான நான்,

ஏதும் ஓராது ... எதையும் ஆராயாமல்,

விரக சாலமேமூடு குடிலின் ... ஆசைகளின் ஜாலங்களால் மூடப்பட்டுள்ள குடிசையான (இந்த உடலில்),

மேவியே நாளு மடியாதே ... இருந்தபடியே தினமும் அழிவடைந்திடாமல்;

குலவு தோகை மீது ஆறு முகமும் வேலும் ... விளங்குகின்ற மயிலின்மேல் ஆறு முகங்களையும், வேலையும்,

ஈராறு குவளை வாகும் ... குவளை மலர்மாலையை அணிந்த பன்னிரண்டு தோள்களையும்,

நேர்காண வருவாயே ... (அடியேன்) நேரில் கண்டு தரிசிகும்படியாக என்னெதிரே வரவேண்டும்.

படியி னோடு மாமேரு அதிர வீசியே ... பூமியும் பெரிய மேருமலையும் அதிரும்படியாக (வேலை) வீசிய,

சேடபணமும் ஆடவே நீடுவரைசாடி பரவை யாழி நீர்மோத... ஆதிசேடனின் நாகத்தின் மணியை உடையதாகிய பணாமகுடங்கள் அசையும்படியாக பரந்த கடலானது பெரிய மலைகளின்மேல் தன் அலையை மோதி(க் கொந்தளிக்கும்படியாக)வும்;

நிருதர் மாள வானாடு பதியதாக ... அசுரர்கள் இறக்கும்படியாகவும்; தேவர்கள் தங்களுடைய தேவலோகத்தில் மீண்டும் குடியேறும்படியாகவும்;

வேலேவு மயில்வீரா ... வேலாயுதத்தை ஏவிய மயில் வீரனே,

வடிவுலாவி யாகாச மிளிர் பலாவின் நீள்சோலை... அழகு விளங்கும்படியாக ஆகாயம் வரையிலே வளர்ந்தோங்கி மிளிர்கின்ற பலாமரங்களின் பெரிய சோலைகளும்;

வனச வாவி பூவோடை வயலோடே ... தாமரைக் குளங்களும்; மலர்கள் நிறைந்த ஓடைகளும்; வயல்களும்;

மணிசெய் மாட மாமேடை சிகரமோடு ... அழகுநிரம்பிய மாடங்களும் சிறந்த மேடைகளும் கோபுரங்களும்,

வாகான மயிலை மேவி வாழ்தேவர் பெருமாளே. ... கலந்து விளங்குகின்ற மயிலாப்பூரில் வீற்றிருப்பவனே!  தேவர்களுடைய பெருமாளே!

சுருக்க உரை

பூமியும் பெரிய மேருமலையும் அதிரும்படியும்; ஆதிசேடனுடைய பணா மகுடங்கள் நடுங்கி அசையும்படியும்; பரந்த கடலின் நீரானது பெரிய மலைகளின்மேல் மோதும்படியும்; தேவர்கள் தம்முடைய வானுலகிலே மீண்டும் குடியேறும்படியும் வேலைச் செலுத்தியவனே!  உயரமான பலா மரங்களும் தாமரைக் குளங்களும் நீர்ப்பூக்கள் நிறைந்த ஓடைகளும் அழகான மாடங்களும் கோபுரங்களும் நிறைந்ததான மயிலாப்பூரில் வீற்றிருப்பவனே!  தேவர்கள் பெருமாளே!

மாறாத கடுஞ்சினத்தையே விரமாகக் கொண்டிருப்பவர்கள்; வஞ்சகர்கள்; கீழோர்கள்; தீவினைகளையே விரும்புவோர்கள் என்று இத்தகையவர்களுடைய ஆகாத தன்மைகளைப் பெரிதும் விரும்பியும்; அருவருப்பானவற்றையே பேசிக்கொண்டும்; ஆசைகளின் ஜாலத்தால் மூடப்பட்டுள்ள இந்த உடலாகிய குடிலில் நான் இருந்தபடி அழிவடைந்து போகாமல்,

அழகிய மயிலின்மேலே ஆறு முகங்களும்; வேலும்; குவளை மலர்மாலையை அணிந்த பன்ணிரண்டு தோள்களும் அடியேன் நேரில் காணுமாறு எதிரே வந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com