Enable Javscript for better performance
ஹரி கிருஷ்ணன்- Dinamani

சுடச்சுட

    

    1953-ல் பிறந்த ஹரி கிருஷ்ணன், பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். பல்வேறு நிறுவனங்களில் பல பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இராமாயண காவியத்தில் உள்ள பல பாத்திரங்களை ஆங்கிலத்தில் விரிவாக எழுதியிருக்கிறார். இவ்வாறு பதினான்கு பாத்திரப் படைப்புகள் முற்றுப் பெற்றுள்ளன. பாரதியில் பெரும் ஈடுபாடு கொண்டவர். பாஞ்சாலி சபதத்தை, மனனம் செய்து, தனி நடிப்பாகச் செய்திருக்கிறார். வியாச பாரதத்துக்கும் பாஞ்சாலி சபதத்துக்கும் உள்ள ஒற்றுமைகளை ஆராய்ந்து தொகுத்துள்ளார். ஆங்கில இலக்கியத்தில் பயிற்சி உண்டு. உளவியல், சரித்திரம், விஞ்ஞான நூல்களைப் படிப்பதில் ஆர்வம் மிக்கவர்.

    கடந்த 17 ஆண்டுகளாக இணையத்தில் செயல்பட்டு வருகிறார். 27 மடற்குழுக்களில் இவர் உறுப்பினராக இருக்கிறார். தமிழிலும் ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதுவதுடன், மொழிபெயர்ப்பும் செய்து வருகிறார். இதுவரையில் அனுமன்: வார்ப்பும் வனப்பும், நினைவில் நின்ற சுவைகள், கோப்பைத் தேநீரும் கொஞ்சம் கவிதையும், ஓடிப் போனானா (பாரதி பாண்டிச்சேரிக்குச் சென்றது பற்றிய ஆய்வு) ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. இத்துடன், இராமாயண – மகாபாரதத் தலைப்புகளில் உரையாற்றியும் வருகிறார். பெங்களூருவில் கம்பராமாயண முற்றோதல் குழுவை வழிநடத்துகிறார். முற்றோதல் முடிவடையும் நிலையில் இருக்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai