Enable Javscript for better performance
கல்லூரியில் உலக சுற்றுலா தினம்- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் சனிக்கிழமை உலக சுற்றுலா தினம் மற்றும் உலக ரேபிஸ் தினம் கொண்டாடப்பட்டது.

        பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வழிபாட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற உலக சுற்றுலா தின விழாவுக்கு கல்லூரி வரலாற்றுத் துறை சுற்றுலா விரிவுரையாளர் சுரேஷ் வரவேற்புரை வழங்கினார்.  

       பழனி கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) ராஜமாணிக்கம் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் பிரபாகர் முன்னிலை வகித்தார்.  திண்டுக்கல் மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்டச் செயலர் சேக் தாவூத், வரலாற்றுத் துறைத் தலைவர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், சுற்றுலாத் துறை அலுவலர் குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

       விழாவை முன்னிட்டு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு,   வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் வழங்கினார்.

    உலக ரேபிஸ் தினம்: உலக ரேபிஸ் தின விழாவை பழனி நகராட்சி, கால்நடை மருத்துவத் துறை, தேனி அவார்டு டிரஸ்ட் மற்றும் கல்லூரி செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இணைந்து நடத்தின.

       முகாமுக்கு கல்லூரி முதல்வர் பிரபாகரன் தலைமை வகித்தார்.  கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் பாபுஜி தலைமையுரை நிகழ்த்தினார். முனைவர் ரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். மனித நேய கல்வியாளர் ராதாகிருஷ்ணன், நகராட்சி நகர்நல அலுவலர் பொற்கொடி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.   இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் திட்ட அலுவலர் பேராசிரியர் சேதுராமலிங்கம் நன்றியுரை வழங்கினார். விழாவில் ரேபிஸ் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்  வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai