Enable Javscript for better performance
பள்ளியில் நால்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு பிரின்ஸ்டன் பள்ளியில் பலூன் தினம், தாத்தா பாட்டி தினம், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினம் என நால்பெரும் விழாவாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

    விழாவுக்கு விஸ்டம் கல்வி அறக்கட்டளைத் தலைவர் டி.ஜி.மணி தலைமை தாங்கினார். கல்விக் குழுமத்தின் சீனியர் முதல்வர் ஜி.மதியழகன் முன்னிலை வகித்தார். கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகி சாந்திமணி பரிசு வழங்கிப் பாராட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் அனைத்து பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் டெய்சி, துணை முதல்வர் யூ.ஸ்ரீதேவி, பள்ளி ஆசிரியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai