Enable Javscript for better performance
போலீஸ் பாதுகாப்புடன் பஸ் தினம் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்: பொதுமக்கள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    போலீஸ் பாதுகாப்புடன் பஸ் தினம் கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்: பொதுமக்கள் அவதி

    By சென்னை  |   Published on : 27th May 2016 10:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இது குறித்து விவரம்:

    கல்லூரி மாணவர்கள் கொண்டாடும் பஸ் தினத்தால் பொதுமக்களுக்கு இடையூறும்,  சட்டம், ஒழுங்கு பிரச்னையும் ஏற்பட்டதால் சென்னையில் பஸ் தினம் கொண்டாடுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடை விதிக்கப்பட்ட பின்னரும் கல்லூரி மாணவர்கள், அவ்வப்போது பஸ் தினம் கொண்டாடி பொதுமக்களை அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

    இதன் விளைவாக பல நேரங்களில் சட்டம், ஒழுங்கு பிரச்னையில் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. இதைத் தடுப்பதற்காக காவல்துறை சில வேளைகளில் நடவடிக்கை எடுத்தாலும், பல நேரங்களில் பஸ் தினம் கொண்டாடுவதை வேடிக்கை பார்த்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே வெள்ளிக்கிழமை காலை வடபழனியில் இருந்து பட்டினப்பாக்கம் சென்று கொண்டிருந்த 12 பி வழித்தட அரசு பஸ்ûஸ, நந்தனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் பஸ் தினம் கொண்டாடுவதற்காக மறித்து நிறுத்தினர்.  இதைப் பார்த்த பெரும்பாலான பயணிகள்,  அந்த பஸ்ஸில் இருந்து இறங்கி வேறு பஸ்ஸýக்குச் சென்றனர். எஞ்சியிருந்த பயணிகளிடம், மாணவர்கள் தங்களது கல்லூரி வழியாக வேறு வழித்தடத்தில் பஸ்ûஸ இயக்கப்போவதாக தெரிவித்தனராம். இதனால், அவர்களும் சிறிது நேரத்தில் வேறு பஸ்ûஸ தேடிச் சென்றனர்.

     தகவலறிந்த போலீஸார், அங்கு வந்து மாணவர்களிடம் பஸ் தினம் கொண்டாடக் கூடாது என கூறினர். ஆனால் மாணவர்கள் போலீஸார் பேச்சை கேட்கவில்லை. அதேவேளையில் மாணவர்கள் பஸ் தினம் கொண்டாடுவதற்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இதனால் மாணவர்களால் வேறு ஏதேனும் பிரச்னைகள் வந்துவிடக் கூடாது என நினைத்த போலீஸார், அந்த பஸ்ûஸ மாணவர்கள் கூறிய வழித்தடத்தில் இயக்கி கல்லூரிக்கு கொண்டு சென்றனர். இந்த பஸ்ஸிஸ் மாணவர்கள் ஆட்டம், பாட்டு என பஸ் தினத்தை கொண்டாடினர். அதேநேரத்தில் அந்த பஸ்ஸýக்கு போலீஸார் முன்னும் பின்னுமாக வாகனங்களில் பாதுகாப்புக்கு சென்றனர்.

    மாணவர்களின் இந்த போக்கால் பயணிகளும், பொதுமக்களும் அவதியடைந்தனர்.  மாணவர்களைக் கண்டிக்க வேண்டிய போலீஸாரே, மாணவர்களுக்கு ஊக்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது பொதுமக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தடை இருந்தும், மாணவர்கள் பஸ் தினம் கொண்டாட பாதுகாப்பு அளித்த காவல்துறை மீது பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai