Enable Javscript for better performance
மணமேல்குடியில் முப்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    மணமேல்குடி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் குழந்தைகள் தினம், அயோடின் தினம், கை கழுவும் தினம் ஆகிய முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சுப்புலட்சுமி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் முனியசாமி முன்னிலை வசித்தார்.

    குழந்தைகளுக்கு திருக்குறள் வாசித்தல், மாறுவேடம், கொழு கொழு குழந்தைகள் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது.

    பின்னர், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், சாப்பிடுவதற்கு முன் சுத்தமாக கை கழுவுவதின் நன்மைகள் குறித்து பணியாளர்கள் ஜெத்ரு, அமுதா, ராஜலட்சுமி ஆகியோர் பேசினர். பணியாளர் கார்த்திகேயாயினி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai