Enable Javscript for better performance
இந்த நாளில் அன்று: (28.3.1944) - ஆஸ்டிரேலியாவில் இந்தியர் நிலைமை; குடியேற்ற கொள்கை மாறுமாவென திட்டமாக சொல்வதற்கில்லை- Dinamani

சுடச்சுட

    

    இந்த நாளில் அன்று: (28.3.1944) - ஆஸ்டிரேலியாவில் இந்தியர் நிலைமை; குடியேற்ற கொள்கை மாறுமாவென திட்டமாக சொல்வதற்கில்லை

    Published on : 27th March 2014 09:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்த நாளில் அன்று: (28.3.1944)

    ஆஸ்டிரேலியாவீல் இந்தியர் நிலைமை

    குடியேற்ற கொள்கை மாறுமாவென திட்டமாக சொல்வதற்கில்லை

    புதுடில்லி, மார்ச் 27 - ஆஸ்டிரேலிய ஹை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள ஸர் ஐவான் மாக்கே, பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். இந்தியாவுக்கும் ஆஸ்டிரேலியாவுக்கு மிடையே பரஸ்பர நல்லெண்ணத்தையும் நட்பையும் வளர்ப்பதே நமது நோக்கமென்று அவர் தெரிவித்தார். அவர் கூறியதன் கருத்தாவது:- 

    “மூலப் பெருட்களையும் ஆலைப் பண்டங்களையும் பரிமாறிக் கொண்டால் மட்டும் போதாது. விக்ஞானிகள், தொழில், விவசாய நிபுணர்கள் மாணவர், சைத்ரிகர்கள், பத்திரிகைக்காரர்கள், யாத்திரீகர்கள் ஆகிய எல்லோருமே வந்து பார்க்கவேண்டும்.

    “இந்தியாவைப் பற்றி நான் முன்கூட்டியே சில கருத்துக்களை வைத்துக் கொண்டு வரவில்லை. அனுபவ பூர்வமாய் எல்லாவற்றையும் தெரிந்துகொள்வேன். இந்தியாவின் போக்கைப் பற்றி ஆஸ்டிரேலிய சர்க்காருக்கு அவ்வப்பொழுது தகவல் தரப்படும்.

    ஆஸ்டிரேலியாவில் 1500 முதல் 2000 இந்தியர் வரை இருக்கின்றனர். அவர்கள் பெரும்பான்மையும் வர்த்தகர்கள், மாணவர்கள். வோட்டுரிமை, பிரசவ அலவன்ஸ், வயோதிகர் பென்ஷன், அசக்தர் பென்ஷன் எல்லாம் அவர்களுக்கு உண்டு.

    குடியேற்ற நிர்பந்தங்கள்

    நாட்டிற்குள் வரும் எல்லோரும் தம்மைத் தாமே ஆதரித்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு ஏற்பாடு இருந்துவருகிறது. எங்களுக்கு ஒரு வாழ்க்கை நிலைமை இருந்து வருகிறது. அதை காப்பாற்றிக் கொள்ளவே நாங்கள் வருகிறோம். ஆஸ்டிரேலியாவில் வசிக்கும் யாரேனும் வேறு ஒரு நபரைக் கொண்டுவர விரும்பினால் வரும் நபரிடம் 250 பவுன் இருப்பதாக உத்தரவாதம் தர வேண்டும். வர்த்தகர்களாயிருந்தால் 500 பவுன் விற்று முதல் காட்ட தயாராயிருக்க வேண்டும். நாட்டுக்கு வரும் எல்லோரும் ஒரு சொல்வதெழுதல் பரீட்சையில் தேற வேண்டும். வெள்ளை ஆஸ்டிரேலிய கொள்கை என்பது ஒரு கருத்துரைதான்.

    குடியேற்றக் கொள்கையில் ஏதாவது மாறுதல் ஏற்படுமா என்பதைப் பற்றி இப்பொழுது திட்டமாக எதையும் சொல்வதற்கில்லை. ஆனால், யுத்தத்தின் விளைவாக எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. குடியேற்றப் பிரச்னையைப் பற்றி மக்கள்ள் சிந்தித்து வருகின்றனர்.

    செய்திகளுக்கு பிரிட்டிஷ் தணிக்கை

    வாஷிங்டன், மார்ச் 28- அமெரிக்க பத்திரிகைக்கு வரும் அரசியல் சம்பந்தமான செய்திகளை தணிக்கை செய்து அனுப்புமாறு யு.எஸ். ராஜாங்க இலாகா பிரிட்டிஷ் சர்க்காரை கேட்டுக் கொண்டது என்று நியூயார்க் மேயர் தாமஸ் டியூவே வெள்ளிக்கிழமையன்று கூறினார்.

    இது 100க்கு 100 தவறு என்று ராஜாங்க காரியதரிசி ஸ்ரீ.கார்டெல் ஹல் தெரிவித்தார்.

    ராஜீய செய்திகளை பிரிட்டனில் தணிக்கை செய்து அனுப்புவதை ஆட்சேபித்து 1942 நவம்பரில் பிரிட்டிஷ் அயல்நாட்டு மந்திரி ஸ்ரீ.ஈடனுக்கு லண்டனிலுள்ள யுஎஸ் ஸ்தனாதிபதி வினான்ட் மூலம் தாம் யதாஸ்தை அனுப்பியதாக ஸ்ரீஹல் சுட்டிக் காட்டினார்.

    (28.3.1944 தினமணியில் வெளியான செய்திகள்)

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai