சுடச்சுட

  

  இந்த நாளில் அன்று (06.04.1979) - இரண்டாகப் பிரிக்கப்படும் கோவை மாவட்டம்: அமைச்சர் தகவல்

  By DN  |   Published on : 01st April 2016 01:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதிதாக அமையும் கோவை மாவட்டத்தில் கோயம்பத்தூர், அவினாசி, பல்லடம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை ஆகிய ஐந்து தாலுகாக்கள் இடம்பெறும்.

  ஈரோட்டை தலைநகராகக் கொண்டதும், மறைந்த திராவிடர் கழகத் தலைவர் ஈ.வே. ராமசாமி பெயரால் அமைக்கப்படும் புதிய மாவட்டத்தில் ஈரோடு, தாராபுரம், பவானி, கோபிசெட்டிப்பாளையம், சத்தியமங்கலம் ஆகிய ஐந்து தாலுகாக்களும் அடங்கியிருக்கும் என்று சட்டப்பேரவையில் மாயவரம் கிட்டப்பா (திமுக) கேள்விக்குப் பதிலளித்து வருவாய்த் துறை அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம் தெரிவித்தார்.

  புதிதாக அமையும் இரு மாவட்டங்களிலும் முறையே 481 கிராமங்களும், 510 கிராமங்களும் அடங்கியிருக்கும் எனவும், கோவையில் மக்கள் தொகை 12 லட்சத்து 48 ஆயிரம் ஆகவும், ஈரோட்டை தலைநகராகக் கொண்ட பெரியார் மாவட்டத்தின் மக்கள் தொகை 8 லட்சத்து 95 ஆயிரம் ஆகவும் இருக்கும் எனவும் விளக்கினார்.

  புதிய மாவட்டங்கள் எப்போது முதல் செயல்படத் துவங்கும் என்பது குறித்து கூடிய விரைவில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai