சுடச்சுட

  

  இந்த நாளில் அன்று (07.04.1980) - அத்வானி கூட்டிய மாநாட்டில் புது 'பாரதிய ஜனதா கட்சி' துவக்கம்: வாய்பேயி தலைவர்

  By DN  |   Published on : 01st April 2016 03:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எல்.கே. அத்வானி கூட்டிய ஜனதா கட்சி பிரதிநிதிகள் மகாநாட்டில் பாரதிய ஜனதா என்ற பெயரில் புதுக்கட்சியைத் தோற்றுவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

  அதன் தலைவராக வாஜ்பேயி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பின்பு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பரம்பரை சர்வாதிகாரம் வளர்ந்து வருகிறது என்றும், அதன் அறைகூவலைச் சமாளிக்க மக்களை ஒன்று திரட்டுவதே புதுக்கட்சியின் முதல் பணியாக இருக்கும் என்றும் அறிவித்தார்.

  புதுக்கட்சியின் தலைவர் பதவிக்கு வாஜ்பேயியின் பெயரை முன்னாள் பொதுப்பணி, வீட்டு வசதி அமைச்சர் சிக்கந்தர் பக்த் ஆகியோர் ஆமோதித்தனர்.

  வாஜ்பேயி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பலத்த, இடிமுழக்கம் போன்ற கரகோஷத்தின் மூலம் மகாநாடு ஏற்றது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai