சுடச்சுட

    

    இந்த நாளில் அன்று (08.04.1981) - கால்நடைகளுக்கு இன்ஷ்யூரன்ஸ் திட்டம்: ராஷ்டிரபதி யோசனை

    By DN  |   Published on : 01st April 2016 04:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கால்நடைகளுக்குத் தகுந்த இன்ஷ்யூரன்ஸ் பாதுகாப்பு அளிப்பதன் மூலம் உழவர் நலன்களைக் காப்பது அவசியம் என்று ராஷ்டிரபதி நீலம் சஞ்சீவரெட்டி சென்னையில் கால்நடை கல்லூரி பவளவிழா வைபவங்களில் கலந்து கொண்டு பேசுகையில் கூறினார்.

    கவர்னர் எம். சாதிக் அலி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன், வேளாண்மைத் துறை அமைச்சர் கே. காளிமுத்து, உள்ளாட்சித் துறை அமைச்சர் பி. குழந்தைவேலு, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கோமதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

    கவர்னர் சாதிக் அலி தமது உரையில், உலக கால்நடைச் செல்வத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளதென்றாலும், இச்செல்வத்தின் முழுமையான மதிப்பு கிரகிக்கப்படவில்லை என்றும், பால், இறைச்சி முதலான உணவை அவை வழங்குவதோடு உழவுக்காரியங்களிலும் உதவுகின்றன என்றும் பேசினார்.

    ராஷ்டிரபதி சஞ்சீவரெட்டி பேசுகையில், கால்நடைப் பராமரிப்புக்கு தனி முக்யத்துவம் அளிக்கப்பட வேண்டியதன் அவிசயம் பற்றியும், அவற்றுக்கு தகுந்த இன்ஷ்யூரன்ஸ் பாதுகாப்புக்கான அவசியம் பற்றியும் ராஷ்டிரபதி குறிப்பிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai