Enable Javscript for better performance
இந்த நாளில் அன்று (10.04.1983) - சென்னைக்கு ரயிலில் வரும் நீரை இருமடங்காக ஆக்க பரிசீலனை- Dinamani

சுடச்சுட

    

    இந்த நாளில் அன்று (10.04.1983) - சென்னைக்கு ரயிலில் வரும் நீரை இருமடங்காக ஆக்க பரிசீலனை

    By DN  |   Published on : 02nd April 2016 04:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாட்டுக்கு ரயில்களில் டாங்கு வாகன்கள் மூலம் அனுப்பும் தண்ணீரின் அளவை இரு மடங்காக அதிகப்படுத்துவது சாத்தியமாகுமா என்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று ரெயில்வே அமைச்சர் கனிகான் சௌதுரி தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இதர நகரங்களுக்கும் ரயில்கள் மூலம் தண்ணீர் அனுப்ப இயலுமா என்பதும் ஆராயப்படும் என்று ரயில்வே அமைச்சர் கூறினார்.

    ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட கிருஷ்ணா நதி தண்ணீரை வில்லிவாக்கத்தில் சென்னை நகர குடிநீர் திட்டக் குழாயில் திறந்துவிடும் நிகழ்ச்சி வில்லிவாக்கம் ரயிலடியின் மேற்குப்புறம் நடந்தது.

    நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் பேசுகையில், தமிழ்நாட்டில் நிலவும் கடும் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு பற்றி பிரதமர் ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாகவும், ரயில்வே ஏதாவது நிவாரணப் பணி செய்ய வேண்டும் என்று பிரதமர் விரும்பியதாகவும் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai