சுடச்சுட

  

  இந்த நாளில் அன்று (11.04.1984) - மின் நிலையங்களில் நெருக்கடி: நிலக்கரி கப்பலை அனுப்ப மே.வங்க முதல்வருக்கு எம்.ஜி.ஆர். தந்தி

  By DN  |   Published on : 02nd April 2016 04:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தமிழக அனல் மின் நிலையங்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.

  எனவே, பிகார், மேற்கு வங்க நிலக்கரி சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை ஏற்றிக் கொண்டு புறப்படத் தயார் நிலையிலுள்ள இரண்டு கப்பல்களை தமிழகத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரி மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசுவுக்கு தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவசரச் செய்தி அனுப்பி உள்ளார்.

  துறைமுகத் தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக இந்த இரு கப்பல்களும் கல்கத்தா துறைமுகத்திலிருந்து புறப்பட முடியாத நிலை உள்ளது. ஏறத்தாழ 31 ஆயிரம் டன் நிலக்கரி இவ்விரு கப்பல்களிலும் ஏற்றப்பட்டுள்ளது.

  ஒரு கப்பலில் முழுமையாகவும், இன்னொன்றில் மூன்றில் இரண்டு பகுதியும் நிலக்கரி ஏற்றப்பட்டுவிட்டது என்பதைக் குறிப்பிட்டு இந்தச் செய்தியை அனுப்பியுள்ளார்.

  நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையம் தினமும் இரண்டாயிரம் டன் நிலக்கரியும், இரண்டாயிரம் டன் எரி எண்ணையையும் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்கிறது.

  11 ஆயிரம் டன் நிலக்கரி தான் தற்போது அங்கு இருப்பில் உள்ளது. இது ஐந்து நாள் தேவைக்கு மட்டுமே போதுமானது என்று தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் பி. விஜயராகவன் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai