Enable Javscript for better performance
இந்த நாளில் அன்று (12.04.1985) - போபால் விஷவாயு சம்பவம்: பாதிக்கப்பட்டோர் சார்பில் மத்திய அரசு மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    இந்த நாளில் அன்று (12.04.1985) - போபால் விஷவாயு சம்பவம்: பாதிக்கப்பட்டோர் சார்பில் மத்திய அரசு மீது வழக்கு

    By DN  |   Published on : 02nd April 2016 05:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் போபால் நகரில் ஏற்பட்ட விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரின் சார்பில் நஷ்ட ஈடு கோரிக்கைகளை எழுப்ப மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் போபால் விஷ வாயு கசிவு பேரிழப்பு அவசர சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ரிட் மனுவை நஸ்ரின் பீ மற்றும் 13 பேர் தாக்கல் செய்துள்ளார்கள்.

    இந்த அவசர சட்டத்தின் கீழ் மத்திய அரசோ அல்லது மத்திய உள்துறை அமைச்சகமோ அல்லது மத்தியப் பிரதேச மாநில அரசோ அல்லது அரசின் சார்பிலான அமைப்புகளோ எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்று தடை விதிக்கும்படியும் இந்த ரிட் மனு கோருகிறது.

    போபால் விஷ வாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை மத்திய அரசு கைப்பற்றிக் கொண்டுள்ளது என்றும் இந்த ரிட் மனு கூறுகிறது.

    யார் சார்பில் நஷ்ட ஈடு கோருவது, நஷ்ட ஈட்டின் அளவு என்ன, அதை எவ்வாறு அளிப்பது என்பவற்றை முடிவு செய்யக் கூடிய நிலையில் மத்திய அரசு இல்லை என்பதும் இந்த ரிட் மனுவின் வாதம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai