சுடச்சுட

    

    இந்த நாளில் அன்று (13.04.1986) - பெனாஸிர் பூட்டோவைக் கொல்ல முயற்சி: முன்னாள் ராணுவ அதிகாரி பிடிபட்டார்

    By DN  |   Published on : 04th April 2016 03:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவி பெனாஸிர் பூட்டோவை திட்டமிட்டுக் கொல்ல முயற்சி நடந்ததாக அவருடைய உதுவியாளர்கள் நிருபர்களிடம் தெரிவித்தனர்.

    பெனாஸிர் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த லாகூர் புறநகர் வீட்டை ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி உட்பட பத்து பேர் தாக்கினர்.

    முன்புற, பின்புற கதவுகளையும், ஜன்னல்களையும் உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர். பெனாஸிர் வீட்டில் இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைந்த அவர்கள் இரண்டு கார்களில் தப்பிவிட்டனர். ஆனால் அந்த முன்னாள் ராணுவ அதிகாரியை மட்டும் காவலர்கள் பிடித்துவிட்டனர்.

    பெனாஸிர் கடைசி நிமிடத்தில் அந்த வீட்டில் தங்க வேண்டாமென எண்ணி, சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருந்து மற்றொரு வீட்டிற்குச் சென்றதால் இந்தக் கொலை முயற்சியிலிருந்து தப்பியதாகத் தெரிகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai