சுடச்சுட

  

  இந்த நாளில் அன்று (14.04.1987) - சமையல் காஸ் டெபாசிட்டுக்கு வட்டி தரக்கோரி கோர்ட்டில் மனு

  By DN  |   Published on : 04th April 2016 04:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சமையல் காஸ் உபயோகிப்பாளர்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு காஸ் கனெக்சனுக்காக செலுத்தியுள்ள டெபாசிட் தொகைக்கு 11 சத விகித வட்டி தருமாறு கோர்ட் ஆணையிட வேண்டும் என்று கோரி தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் திருச்சி சப் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

  இந்த மனுவை உபயோகிப்போர் பாதுகாப்பு கவுன்சில் செயலர் எஸ். புஷ்பவனம் தாக்கல் செய்துள்ளார்.

  சமையல் காஸ் உபயோகிப்பாளர்கள் இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷனிடம் காஸ் கனெக்சனுக்காக செலுத்திய டெபாசிட் தொகைக்கு 11 சதவிகிதம் வட்டி கோரிப் பெறுவதற்கு உரிமை உண்டு என்றும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

  இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் பொதுத்

   துறையில் அதிக அளவில் லாபத்தை ஈட்டும் இரண்டாவது மிகப்பெரிய ஸ்தாபனமாக உள்ளது. எனவே, டெபாசிட் தொகையால் உபயோகிப்பாளருக்கு எந்த வித பயனும் இல்லாமல் இருக்கிறது.

  எனவே, இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷனிடம் சமையல் காஸ் உபயோகிப்பாளர்கள் செலுத்திய டெபாசிட் தொகைக்கு வட்டி பெறுவதற்கு உரிமை உடையவர்களாகிறார்கள் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai