சுடச்சுட

  

  இந்த நாளில் அன்று (15.04.1988) - சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால் பாதுகாப்பா?

  By DN  |   Published on : 05th April 2016 12:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் பற்றிய விவரங்களை பிறர் அறியாவண்ணம், அத்தகையோரின் பெயருக்குப் பதிலாக இலக்கங்களை மட்டுமே ஒதுக்கும் நடைமுறை தவறான கருத்துக்களின் அடிப்படையில் அமைந்தது என்று சுவிஸ் வங்கிக் குழு பேச்சாளர் ஒருவர் விமர்சித்திருக்கிறார்.

  இப்படி இலக்கங்களை மட்டுமே கொடுப்பதால் என்ன நன்மை? கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றிய தகவல் குறிப்பிட்ட சில வங்கி அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்கும். இதனால் அது எவருக்குமே தெரியாத பரம இரகசியம் என்ற அர்த்தமல்ல என்றார் அவர்.

  முன்னாள் இந்தோனேசிய அதிபர் பெர்டினண்ட் மார்கோஸ், பதவி கவிழ்க்கப்பட்ட ஹெய்ட்டி தேச அதிபர் ஜூன் குளோடா டுவாலியர் போன்றவர்கள் கணக்கு வைத்திருந்ததால் ஏற்பட்ட சங்கடங்களை தவிர்க்க, வெளிநாட்டுத் தலைவர்கள் சுவிஸ் வங்கிகளில் கணக்குத் துவங்க முன்வரும் பொழுது அவ்வங்கிகள் கடுமையான விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் அனுஷ்டிக்க வேண்டும் என்று சுவிஸ் வங்கிக் குழு தனது அறிக்கையில் கருத்து வெளியிட்டுள்ளது.

  இந்த அறிக்கை மீது கருத்துக் கூறியபோதே அப்பேச்சாளர் இப்படித் தெரிவித்தார்.

  மேலும் பேசுகையில், ஆட்சித்தலைவர்களிடமிருந்து பெருமளவு நிதியை வங்கிக் கணக்கு திறப்பதற்காக பெற்றுக் கொள்வது எத்தனை சிக்கலை ஏற்படுத்தும் என்பதற்கு மார்கோஸ், டுவாலியர் ஆகியோரது சுவிஸ் வங்கிக் கணக்குகள் நல்ல உதாரணங்களாகும்.

  வளரும் நாடுகளின் அரசியல் மற்றும் ராணுவத் தலைவர்கள் கணக்குத் திறக்க முன்வரும் போது வங்கிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai