சுடச்சுட

    

    இந்த நாளில் அன்று (16.04.1989) - கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு

    By DN  |   Published on : 05th April 2016 12:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வறட்சிக் காலத்தில் வேலை வாய்ப்பு இன்மையும், வருவாயின்மையும் மிக அதிக அளவில் தென்படும். அவற்றைச் சமாளிக்க மாவட்ட கலெக்டர்கள், வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தும் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் கூறினார்.

    மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலிஸ் சூப்பிரண்டெண்டுகள், மண்டல போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல்கள் இரண்டு நாள் கூட்டம் சனியன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தைத் துவக்கி வைத்து முதல்வர் பேசுகையில் மேற்கண்டவாறு கூறினார்.

    கள்ளச் சாராய ஒழிப்பில் காவல்துறையினர் அதிக கவனம் செலுத்தி கள்ளச் சாராயத்தை அறவே ஒழித்திட எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று முதல்வர் கூறினார்.

    வறட்சி காரணமாக மக்களுக்கு துன்பம் ஏற்படாமல் வறட்சியை முறியடிக்க மாவட்டக் கலெக்டர்கள் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் முதல்வர் கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai