சுடச்சுட

    

    இந்த நாளில் அன்று (17.04.1990) - பாட்னாவில் ரயில் பெட்டியில் பற்றிய தீயில் கருகி 72 பேர் பலி

    By DN  |   Published on : 15th April 2016 03:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிகாரில் பாட்னா அருகே ஒரு பாசஞ்சர் ரயிலின் 2 பெட்டிகளில் தீப்பற்றிக் கொண்டதில் 72 பயணிகள் உயிருடன் கருகி இறந்தனர். மேலும் பலர் தீக்காயமடைந்தனர்.

    தீ விபத்துக்குள்ளானபோது அந்த பாசஞ்சர் ரயிலின் 2 பெட்டிகளிலும் அளவுக்கு அதிகமாகப் பயணிகள் இருந்தனர். பாட்னாவையடுத்த நயாடோலா பகுதியில் இந்த விபத்து நடந்தது. நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான ரயில் விபத்துகளில் இதுவும் ஒன்றாகும்.

    ரயில் பெட்டி ஒன்றில் பயணி ஒருவர் வைத்திருந்த சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர் வெடித்துத் தீப்பற்றிக் கொண்டதாக தீயணைப்புத் துறை வட்டாரங்கள் கூறின.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai