சுடச்சுட

    

    இந்த நாளில் அன்று (18.04.1991) - தமிழ்நாடு, புதுவையில் மே 26ல் வாக்குப்பதிவு: துறைமுகம் தொகுதியில் கருணாநிதி மீண்டும் போட்டி

    By DN  |   Published on : 15th April 2016 03:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாட்டிலும், புதுவை யூனியன் பிரதேசத்திலும் மக்களவை, சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 26ம் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் கமிஷனர் அறிவித்தார்.

    தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களிலும், புதுச்சேரி உள்பட ஏழு யூனியன் பிரதேசங்களிலும் ஒரே ஒரு நாள் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும்.

    இது தொடர்பாக தேர்தல் அட்டவணையை தேர்தல் கமிஷன் புது தில்லியில் வெளியிட்டது.

    தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சென்னை துறைமுகம் தொகுதியிலும், முன்னாள் அமைச்சர் அன்பழகன் சென்னை சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

    சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் மு.க. ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai