இந்த நாளில் அன்று (19.04.1992) - பென்டகனில் எலித் தொல்லை; அதுவும் பெரிய பெருச்சாளி
By DN | Published on : 15th April 2016 03:27 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
எலிகளையும் கரப்பான் பூச்சிகளையும் ஒழிக்க உலக நாடுகள் எவ்வளவோ முயற்சிகள் எடுக்கின்றன. ஆனால் இறுதியில் மனிதனுக்குத் தோல்வியே ஏற்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்திலும் எலிகளின் அட்டகாசம் அதிகமாகிவிட்டது.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் பென்டகன் கட்டடம் உள்ளது. இங்குதான் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம் உள்ளது.
உலகின் பாதுகாப்புக்கே அச்சாணியாக விளங்கும் இந்த அமைச்சகம், எலித் தொல்லையிலிருந்து பாதுகாப்பு பெற முடியவில்லை.
இங்கு சுமார் 24 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். குறைந்தது ஆளுக்கு ஒரு எலி வீதம் உள்ளது. எலி என்றால் சாதாரண எலி என்று நினைத்துவிட வேணடாம். பெரிய பெருச்சாளி. இதன் நீளம் ஒன்றரை அடி.
கோப்புகளை இழுத்துக் கொண்டு போய் வேறு இடத்தில் போடுவது, ஊழியர்கள் மீது ஏறி விளையாடுவது என்று எலிகளின் தொல்லை தாங்க முடியவில்லை.