சுடச்சுட

    

    இந்த நாளில் அன்று (20.04.1993) - மும்பை குண்டு வெடிப்பு: நடிகர் சஞ்சய் தத் கைது

    By DN  |   Published on : 18th April 2016 04:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இ. காங்கிரஸ் எம்.பி. சுநீல் தத்தின் மகனும் பிரபல ஹிந்தி திரைப்பட நடிகருமான சஞ்சய் தத் பம்பாயில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் காரணமாக பயங்கரவாத, சீர்குலைவு நடவடிக்கைகள் தடுப்பு (தடா) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    இந்தத் தகவலை மகாராஷ்டிர முதல்வர் சரத் பவார் மாநில சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

    தம்மிடம் ஏ.கே. 56 ரக துப்பாக்கி உள்ளதாக சஞ்சய் தத் ஒப்புக் கொண்டார். அவரது வீடு சோதனையிடப்பட்டது என்ற தகவலையும் பவார் கூறினார்.

    பம்பாயில் தொடர்ச்சியாக நடந்த குண்டு வெடிப்புகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் தம்மிடமிருந்து துப்பாக்கி வாங்கியவர்களில் சஞ்சயும் ஒருவர் என்று கூறியிருந்தார். இதையடுத்து சஞ்சயிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai