சுடச்சுட

  

  இந்த நாளில் அன்று (21.04.1994) - கருணாநிதி போல நடந்து கொள்ளவில்லை.. நினைத்திருந்தால் அண்ணா அறிவாலயத்தை தகர்த்திருப்போம் : முதல்வர் ஜெயலலிதா

  By DN  |   Published on : 21st April 2016 10:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திமுக தலைவர் கருணாநிதியைப் போல சின்னபுத்தியுடன் நாங்கள் நடந்துக் கொள்ள விரும்பியிருந்தால், வை.கோ. தலைமையில் நடைபெற்ற பேரணியை ஒரு காரணமாகப் பயன்படுத்தி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தையே தவிடுபொடியாக்கியிருப்போம் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் கூறினார்.

  அரசியல் ரீதியாக எங்களை எதிர்ப்பவர்களுக்குக் கூட பலத்த போலீஸ் பாதுகாப்பை அளித்துள்ளோம் என்றும் அவர் சொன்னார்.

  ராயபுரத்தில் வை.கோ. அணியின் சென்னை மாவட்டப் பொறுப்புக் குழுத் தலைவர் ஏழுமலை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பரிதி இளம் வழுதி பேசுகையில் குறுக்கிட்டு பேசிய முதல்வர், வைகோ தலைமையிலான கட்சி சென்னையில் பேரணி நடத்த அனுமதி பெற்றது.

  அப்போது, தங்கள் கட்சி அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கும்படி திமுக தலைவர் கருணாநிதி அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

  அப்போது நான் காவல்துறையிடம் சொன்னது இதுதான். அண்ணா அறிவாலயத்துக்குப் பலத்த பாதுகாப்புப் போடப்பட வேண்டும். ஒரு சின்ன துரும்பு கூட அக்கட்சி அலுவலகத்தின் மீது விழுந்து விடக் கூடாது என்றுதான் என கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai