சுடச்சுட

    

    22.04.1995 - சென்னையைத் தவிர வேறு எங்கும் சுவாமியை கைது செய்யக் கூடாது : உச்ச நீதிமன்றம் உத்தரவு

    By DN  |   Published on : 21st April 2016 05:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் உள்ள எந்த நீதிமன்றம் பிறப்பித்த வாராண்டானாலும், சென்னையைத் தவிர மற்ற இடங்களில் சுப்பிரமணியன் சுவாமியைக் கைது செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு உத்தரவிட்டது.

    அப்படிச் சென்னையில் கைது செய்யும் பட்சத்தில் நூறு ரூபாய் சொந்த ஜாமீன் பத்திரத்தை அவர் தாக்கல் செய்தால் அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும். சுப்பிரமணியன் சுவாமிக்கு அளிக்கப்பட்டு வரும் இசட் பிரிவு பிரமுகர்களுக்கான பாதுகாப்பு தொடர வேண்டும்.

    அவரது உயிரைக் காக்கத் தமிழக அரசும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

    மதுரையில் சுவாமி பேசும் பொழுது ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகப் பதிவான வழக்கின் அடிப்படையில் மதுரை நீதிமன்றம் அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. அந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி சுவாமி மனு செய்தார். அதன் மீது நீதிபதிகள் இன்று உத்தரவு பிறப்பித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai