சுடச்சுட

  

  இந்த நாளில் அன்று (23.04.1996) - தேர்தலில் ரூ.50, 100 கொடுத்தால் வாங்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்த்

  By DN  |   Published on : 19th April 2016 04:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜெயலலிதாவை ஆட்சியிலிருந்து முற்றிலும் இறக்கிவிட்டோம் என்ற நிலையை மக்கள் ஏற்படுத்த வேண்டும் என்று ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.

  தனியார் தொலைக்காட்சிகளுக்கு தம் இல்லத்தில் பேட்டி அளித்தார் ரஜினிகாந்த். அந்த பிரசாரப் பேட்டி விவரம்..

  ஜெயலலிதா மிகப்பெரிய அளவுக்குப் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தார். தவறு செய்தார், அதனால் அதே போல அவரை முழுமையாகக் கீழே இறக்கிவிட்டோம் என்ற நிலையை மக்கள் ஏற்படுத்த வேண்டும்.

  பதவிக்கு வருபவர்கள் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தினால் இப்படித்தான் ஆகும் என்ற நிலை வர வேண்டும்.

  தமிழக மக்களைப் பணத்தால் வாங்க முடியாது. ஆனால், இங்கே பணம் எக்கச்சக்கமாக உள்ளது. பணம் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லாதீர்கள்.  50, 100 ரூபாய் எனக் கொடுத்தால் வாங்காதீர்கள். தலா ரூ.500, 1000 ரூபாய் வேண்டும் என்று கேளுங்கள்.

  அவ்வளவும் உங்கள் பணம். பணம் வாங்கி விட்டோமே என்று நினைத்து அவர்களுக்கு வாக்கு அளித்து விடாதீர்கள் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai