சுடச்சுட

  

  இந்த நாளில் அன்று (24.04.1997) - மூப்பனாருக்கு பிரதமர் பதவி கிடைக்காதது பற்றி விவாதம்; உண்மை வெளிவரும்: கருணாநிதி

  By DN  |   Published on : 19th April 2016 04:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மூப்பனாருக்கு பிரதமர் பதவி கிடைக்காதது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. இதில் முதல்வர் கருணாநிதி, அழகிரி (த.மா.கா.) லத்தீப் (தேசிய லீக்) ஆகியோர் பேசினர்.

  பேரவையில் தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தைத் துவக்கி வைத்து அழகிரி பேசியதாவது,

  போன வாரமே இந்த மானியக் கோரிக்கையை எடுத்திருக்க வேண்டும். பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு முதல்வருக்கு இருந்ததால் ஒத்திவைத்தனர்.

  போன வாரம் பேசியிருந்தால் சந்தோஷமாகப் பேசியிருப்பேன். இப்போது கனத்த இதயத்தோடு பேசுகிறேன். தமாகா தலைவர் மூப்பனாருக்குப் பிரதமர் பதவி கிடைக்கவில்லையே என்பதற்காக அல்ல, தமிழனுக்குக் கிடைக்கவில்லையே என்ற கனத்த இதயம் உள்ளது.

  லத்தீப் : அழகிரி பேசும்போது கனத்த இதயத்தோடு பேசுவதாகக் கூறினார். கனத்த இதயத்தோடு பேச நாட்டில் சில பேர் உருவாகியிருக்கக் கூடும். மூப்பனாரும், கருணாநிதியும் தில்லியில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டுத்தான் வந்திருக்கிறார்கள்.

  விவாதத்துக்குப் பதிலளித்த முதல்வர் கருணாநிதி, இதயத்தைக் கனமாக்கிக் கொள்ள விரும்பியதில்லை, ஆக்கிக் கொண்டதில்லை. அண்ணாவின் இதயத்தை இரவலாக வாங்கி எதையும் தாங்கும் இதயத்தோடு அரசியலை நடத்தி வருகிறேன்.

  மனச்சாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடும். உண்மை பல காலம் இருட்டில் இருக்காது. வெளிச்சத்துக்கு வந்து விடும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai