சுடச்சுட

  

  இந்த நாளில் அன்று (25.04.1998) - வீரப்பனின் கூட்டாளி துப்பாக்கி சித்தன் சரண் ; 4 பேரே எஞ்சியுள்ளனர்

  By DN  |   Published on : 19th April 2016 05:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சந்தனக் கடத்தல் வீரப்பனின் நெருங்கிய கூட்டாளி துப்பாக்கிச் சித்தன் வெள்ளிக்கிழமை காலை போலிசீல் சரணடைந்தார்.

  நக்கீரன் பத்திரிக்கையின் ஈரோடு நிரூபர் ஜீவா தங்கவேலு துணையுடன் அதிரடிப் படைத் தலைவரும், சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனருமான பெ. காளிமுத்து முன் சித்தன் சரணடைந்தார்.

  அதன்பிறகு நிரூபர்களிடம் காளிமுத்து கூறியதாவது, வீரப்பனின் மிக நெருங்கிய கூட்டாளியாகக் கருதப்பட்ட துப்பாக்கி சித்தனையும் சேர்த்து வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  எஞ்சியுள்ள வீரப்பனையும் அவனது கூட்டாளிகளையும் விரைவில் கைது செய்யவோ அல்லது சரண் அடையச் செய்யவோ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் காளிமுத்து.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai