சுடச்சுட

  

  26.04.1999 - காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியவில்லை: சோனியா காந்தி அறிவிப்பு

  By DN  |   Published on : 21st April 2016 05:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பலத்தைத் திரட்ட முடியவில்லை என்று குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனிடம் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.

  மூன்றாவது அணி, நான்காவது அணி என்று எந்த அணியும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்காது என்பதையும் குடியரசுத் தலைவரிடம் அவர் தெளிவுபடுத்தினார்.

  இதையடுத்து, மீண்டும் வாஜபேயி தலைமையில் பாரதிய ஜனதா கூட்டணி அரசு அல்லது தேர்தல் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

  குடியரசுத் தலைவரை சந்தித்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சோனியா, காங்கிரஸ் அரசு அமைக்க முதலில் ஆதரவு அளிக்கத் தயாராக இருந்த சில கட்சிகள் தேச நலனைவிட, சுயநலமே பெரிதென்று செயல்பட்டதால் காங்கிரஸ் கட்சியால் ஆதரவு திரட்ட முடியவில்லை என்று கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai