சுடச்சுட

  

  27.04.2000 - நளினிக்கு தண்டனை குறைப்பு: மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு: கருணாநிதி

  By DN  |   Published on : 20th April 2016 04:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மனிதாபிமான அடிப்படையில் நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பரிந்துரைக்கப்பட்டது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

  இது தொடர்பாக சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசியதாவது,

  அழகிரி (தமாகா) - கருணை அடிப்படையில் என்று கூறி ராஜீவ் கொலையாளிக்குத் தமிழக அரசு துணை போயிருப்பது வேதனையளிக்கிறது. தமிழக மண்ணில்தான் ராஜீவ் கொலை செய்யப்பட்டார்.

  பெண் என்பதால் நளினிக்குப் பரிவு காட்டப்பட்டால், விடுதலைப் புலிகள் இனி கொலைச் செயலை நிறைவேற்றப் பெண்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

  மேல் முறையீட்டக்குப் பல வழிகள் இருக்கும் போது தமிக அமைச்சரவை இவ்வாறு பரிந்துரைத்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

  ஜெயின் கமிஷன் அறிக்கையில் கூட திமுக மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

  முதல்வர் : எந்தப் பக்கத்தில் இத்தகைய வாசகம் இடம்பெற்றுள்ளது என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். புழுதி வாரித் தூற்றக் கூடாது என்று பேசினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai