சுடச்சுட

    

    28.04.2001 - வாஜபேயிடமிருந்து என்னைப் பிரிக்க கருணாநிதி சதி: வைகோ குற்றச்சாட்டு

    By DN  |   Published on : 22nd April 2016 03:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாஜபேயிடமிருந்து என்னைப் பிரிக்க கருணாநிதி திட்டமிடுகிறார் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட வைகோ பேசுகையில், கடந்த 1952ம் ஆண்டிற்குப் பிறகு நடைபெற்ற 11 சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவிலிருந்து முற்றிலும் வித்தியாசமான தேர்தல் முடிவுகளை இந்த முறை நாம் பார்க்கப் போகிறோம். அதற்கான மௌனப் புரட்சியை ஏற்படுத்த மக்கள் தயாராகிவிட்டனர்.

    நான் கூட்டணி தர்மத்தை அறிந்தவன். புது தில்லியில் நான் பேசிய பேச்சைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தவர் வாஜபேயி. அவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையைத் தகர்த்துவிட்டு அவரிடமிருந்து என்னைப் பிரிக்கத் திட்டமிட்டவர் கருணாநிதி. அடுத்தபடியாக கூட்டணியில் குறைவான இடங்களை ஒதுக்கிக் கட்சிக்கும் பிளவை ஏற்படுத்தத் திட்டமிட்டவர் கருணாநிதி.

    அதையும் மீறி போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம் மதிமுகவை தோற்கடிக்க வேண்டும் எனத் திட்டமிட்டவர் கருணாநிதி என்று வைகோ குற்றம்சாட்டினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai