சுடச்சுட

  

  29.04.2002 - நடந்ததை மறப்போம், வகுப்புவாத வெறிக்கு முடிவு கட்டுவோம்: அமைதிப் பேரணியில் மோடி பேச்சு

  By DN  |   Published on : 22nd April 2016 04:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மனிதத் தன்மை மிக்க பாதைக்கு குஜராத்தை மீண்டும் கொண்டு வந்தாக வேண்டம். இதுவரை நடந்தவற்றை மறப்போம். அறிவீனமான வகுப்புவாத வெறிக்கு முடிவு கட்டுவோம் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார்.

  ஆமதாபாதில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அமைதிப் பேரணியில் அவர் பேசியதாவது, குஜராத்தில் பல்வேறு சமுதாய மக்களிடையே பரஸ்பர நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தியாக வேண்டும். ஆனால், மக்களை நம்புவதை விட வதந்திகளைத்தான் இப்போது பலர் நம்புகின்றனர் என்பது வேதனையானது.

  காட்டுத் தீ போலப் பரவிய வதந்திகளால்தான் இதுவரை இருந்திராத அளவுக்கு வன்செயல்கள் குஜராத்தில் நடந்துள்ளன. சட்டவிரோதப் பிரசுரங்கள் குறித்தும் பத்திரிக்கைகளில் வரும் பரபரப்பூட்டும் செய்திகள் குறித்தும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  குஜராத்தில் உள்ள நாம் அனைவரும் துயரத்தில் இருக்கிறோம். மனத்துக்கு இதமளிக்கும் நடவடிக்கையே இப்போதைய தேவை. வன்முறையில் ஈடுபடுவோரைத் தனிமைப்படுத்த வேண்டும் என்றார் மோடி.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai