சுடச்சுட

    

    30.04.2003 - தாயின் இனிஷியல் சமூக மறுமலர்ச்சிக்கு வித்திடும் : புதிய அரசாணை குறித்து ஜெயலலிதா

    By DN  |   Published on : 22nd April 2016 04:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழந்தைகள் தங்கள் தாயின் பெயரில் உள்ள முதலெழுத்தை தலைப்பெழுத்தாகப் பயன்படுத்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

    பேரவையில் இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த 28.3.1994ல் வெளியான அரசாணை எண் 246ல், தந்தை இல்லாதிருக்கும் பட்சத்தில் குழந்தையின் பெயருக்கு முன்னால், தாயின் பெயரில் உள்ள முதல் எழுத்தைப் போட்டுக் கொள்ள ஆணையிடப்பட்டது.

    தற்போது பள்ளிக் கல்வித் துறை மூலம் 28.4.2003ல் அரசாணை எண் 60 வெளியிடப்பட்டுள்ளது.

    புதிய ஆணையின்படி, ஒரு குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் போது, அக்குழந்தையின் பெற்றோர் விருப்பப்படி குழந்தையின் பெயருக்கு முன் தாயின் பெயரில் உள்ள முதல் எழுத்தையும், அதனையடுத்து தந்தையின் பெயரில் உள்ள முதல் எழுத்தையும் பயன்படுத்தலாம். அல்லது தாயின் பெயரில் உள்ள முதலெழுத்தை மட்டும் தலைப்பெழுத்தாகப் பயன்படுத்தலாம். அல்லது தந்தையின் பெயரில் உள்ள முதலெழுத்தை மட்டும் தலைப்பெழுத்தாகப் பயன்படுத்தலாம்.

    இதன் மூலம், ஒரு சமூக மறுமலர்ச்சிக்கு வித்திடுகின்ற திருநாளாக இந்த நாள் வரலாற்றில் குறிக்கப்படும் என்பதை பேரவையின் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai