Enable Javscript for better performance
ஆகஸ்ட் - 13 சர்வதேச இடது கை பழக்கமுள்ளோர் தினம்- Dinamani

சுடச்சுட

    

    ஆகஸ்ட் - 13 சர்வதேச இடது கை பழக்கமுள்ளோர் தினம்

    By கார்த்திகேயன் வெங்கட்ராமன்  |   Published on : 13th August 2016 01:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    lefties

    உலகமெங்கும் இடது கை பழக்கம் கொண்டுள்ளவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஆண்டு தோறும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி சர்வதேச இடது கை பழக்கமுள்ளோர் தினமாக கொண்டாடப்படுகிறது. உலக இடது கை பழக்கமுள்ளவர்கள் குழு இதற்கான முயற்கிகளை முன்னெடுத்து வருகிறது.

    இடது கை பழக்கம் உள்ளவர்களை குறிக்க 'சினிஸ்ட்ராலிட்டி' என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. ;சினிஸ்டரா' என்ற லத்தின் சொல்லில் இருந்து இது உருவானது. 'சினிஸ்டரா' என்ற சொல்லுக்கு 'இடது பக்கமாக இருப்பது' என்று அர்த்தம். நாளடைவில் இடது என்பது 'தீமை' என்பதோடு தொடர்புபடுத்தப்பட்டது. காலங்கள் செல்லச் செல்ல, இடது கை பழக்கம் என்பது வலிமையின்மை, தூய்மையற்ற தன்மை மற்றும் தீமை ஆகிய குணங்களோடு சேர்த்து பொருள் கொள்ளப்பட்டது. இன்னும் கூட அது போன்ற கருத்தாக்கங்கள் கொண்டவர்கள் இருக்கலாம், ஆனால் உண்மையில் பெரும்பாலும் வலது கை பழக்கம் உள்ளவர்கள் கொண்ட ஒரு சமூகத்தில், இடது கை பழக்கம் உள்ளவர்கள் படும் சிரமங்களை யாரும் எண்ணி பார்ப்பதில்லை.

    1976-ஆம் ஆண்டுதான் முதன்முதலாக ஆகஸ்ட் - 13 ஆம் தேதியை சர்வதேச இடது கை பழக்கம் உள்ளவர்கள் தினமாக கொண்டாடும் வழக்கம் உருவானது. இந்த சமூகத்தில் இடது கை பழக்கம் உடையவ்ரகள் படும் சிரமங்களை மற்றவர்கள் உணரச் செய்யும் படியான விழிப்புணர்வை உருவாக்கும் பொருட்டே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

    உலக மக்கள் தொகையில் ஏழு முதல் பத்து சதவீதம் வரையுள்ள இடது கை பழக்கம் உள்ளவர்களை கொண்டாடும் விதமாகவும், இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai