சுடச்சுட

    

    01.05.2004 - கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி வெற்றி பெறுவோம்: முதல்வர் ஜெயலலிதா

    By DN  |   Published on : 28th April 2016 03:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலில் தமிழகத்தைப் பொருத்தவரை கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி வெற்றி பெறுவோம் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

    நாகர்கோவில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளும் சமயத்தில், என்டிடிவிக்கு அவர் அளித்த பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது,

    எதிர் அணியில் அதிக கட்சிகள் இருப்பது குறித்து எந்த கவலையும் இல்லை.

    மகாபாரதத்தில் பாண்டவர்கள் 5 பேர்தான். அவர்கள் ஆயிரம் கௌரவர்களை வென்றதாக வரலாறு உள்ளது. எனவே கூட்டணியை விட வெற்றிதான் முக்கியம்.

    கருத்துக் கணிப்புகள் குறித்து எந்த கவலையும் எனக்கு இல்லை. கணிப்புகளைப் பொய்யாக்கி வெற்றி பெறுவோம்.

    சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் எதிர்க்கவில்லை. அதே சமயம் அவர் வெளிநாட்டவர் என்பது தேசியப் பிரச்னையாகும்.

    ஒரு இந்தியர்தான் இந்தியாவை ஆள வேண்டும்.

    தமிழகத்தை முத்ன்மை மாநிலமாக உருவாக்க கடந்த 3 ஆண்டுகளாக தினமும் 20 மணி நேரம் மக்களுக்காகப் பணியாற்றுகிறேன். இந்த 3 ஆண்டுகளில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் 6,694 கோடிக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன் என்று கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai