சுடச்சுட

    

    03.05.2006 - தேர்தலில் நிற்க பயந்தார் ஒருவர்.. அவரை ராஜ்ய சபைக்கு அனுப்பினேன்: வைகோ குறித்து கருணாநிதி

    By DN  |   Published on : 28th April 2016 03:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆதிதிராவிடர் சிலரின் சாவுக்குக் காரணமாக இருந்ததாகத் தன் மீது அவதூறான குற்றச்சாட்டைக் கூறியிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி ரூ.1 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    கருணாநிதியின் பேச்சை வெளியிட்ட முரசொலி பத்திரிகை ஆசிரியர் முரசொலி செல்வம், வெளியீட்டாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    அந்த நோட்டீஸில், ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி , ஒருவர் தேர்தலில் நிற்க பயந்தார். அவரை மூன்று முறை நாமினேஷன் மெம்மராக ராஜ்ய சபைக்கு (மாநிலங்களவைக்கு) அனுப்பினேன். அவர் கருணாநிதியைத் தேர்தலிலேயே நிற்க முடியாமல் செய்யுங்கள். ஏனென்றால், அவர் சாதிப் பிரச்னையைக் கிளப்புகிறார் என்று கூறுகிறார்.

    தெரியாதா எனக்கு ஆதிதிராவிடர் மக்களிடத்திலே உன்னுடைய சாதித் திமிரைக் காட்டி கலிங்கப்பட்டியில் இரண்டு மூன்று ஆதிதிராவிடர்கள் சாவதற்குக் காரணமாக நீ இருந்தாய் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் உன் மேல் குற்றம்சாட்டியது எனக்குத் தெரியும். அவர்களிடத்தில் நான் அல்லவா போய் கெஞ்சி போனால் போகட்டும் இதோடு விட்டுவிடுங்கள் என்று சமாதானப்படுத்தியவன் என்ற கருணாநிதி கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai