சுடச்சுட

    

    04.05.1960 எட்டு தடவை யமனுக்கு டிமிக்கிக் கொடுத்த குற்றவாளி: சட்டம் படித்து தானே வாதாடியவருக்கு தூக்கு நிறைவேற்றம்

    By DN  |   Published on : 30th April 2016 02:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சான்பிரான்சிஸ்கோ : டெலிபோன் குளறுபடி காரணமாக 9வது தடவை யமனுக்கு டிமிக்கி கொடுக்கும் வாய்ப்பை உலகப் புகழ்பெற்ற குற்றவாளி செஸ்மன் இழந்தார்.

    அவர் வழக்கில் வாதங்களைக் கேட்பதற்காக தண்டனையை 30 நிமிஷம் நிறுத்தி வைக்க உத்தேசித்ததாக நீதிபதி லூயி குட்மன் கூறினார்.

    தண்டனையை நிறுத்தும் உத்திரவை பிறப்பிக்க சான் குவெண்டின் சிறைக்கு அவர் போன் செய்தார்.

    ஆனால், அவருடைய காரியதரிசி, டெலிபோன் எண்களில் குளறுபடி செய்ததால் போனில் அவர் பேசுவதற்குள் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது.

    எட்டு தடவைகள் எமனுக்கு டிமிக்கி கொடுத்த செஸ்மன், ஒன்பதாவது தடவையும் டிமிக்கி கொடுத்திருப்பார். ஆனால், டெலிபோன் குளறுபடி யமனுக்கு வெற்றியைக் கொடுத்து விட்டது.

    சாதாரண குற்றவாளியான செஸ்மன், தன் விடா முயற்சி காரணமாக 12 வருஷத்தில் உலகப் பிரசித்தி பெற்றார். சிறையில் இருந்து கொண்டே சட்ட நூல்களை வாங்கி படித்து திறமையாக தனக்காக தானே வழக்காடினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai