சுடச்சுட

  

  05.05.1961 - மேல் கோர்ட்டுகளில் ஒரே பாஷையை கையாள்வது நல்லது; கீழ்க் கோர்டுகளில் பிராந்திய மொழி: யூனியன் சட்ட மந்திரி கருத்து

  By dn  |   Published on : 30th April 2016 02:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கீழ்க்கோர்ட்டுகள் பிரதேச மொழிகளை உபயோகிக்கலாம் என்றும், ஆனால் மேல் கோர்ட்டுகள் ஒரே மொழியை உபயோகிப்பது விரும்பத்தக்கது என்றும் ராஜ்ய சபையில் சட்ட மந்திரி ஏ.கே. சென் கூறினார்.

  அரசியல் சட்டத்தின்படி ஆங்கிலத்துக்குப் பதில் ஹிந்தி உபயோகிக்கப்பட வேண்டாமா என்று பூபேஷ் குப்தா கேட்டதற்கு பதிலளிக்கையில் மேல் கோர்ட்டுகள் சம்பந்தப்பட்ட வரை மொழிப் பிரச்னை சிக்கலானது என்றார்.

  ஒரே மொழியை உபயோகித்ததன் மூலம் பல நூற்றாண்டுகளாகக் கிடைத்த அனுகூலங்களை மேல் கோர்ட்டுகள் இழந்துவிடக் கூடாது என்பதே தமது கருத்து என்றார்.

  அட்வகேட்டுகள் மசோதா மீது நடந்த விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய சட்ட மந்திரி மேல் கோர்ட்டுகளில் உபயோகிக்கப்பட வேண்டிய மொழி பற்றி இறுதியாக ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னதாக பிரச்னையின் பல்வேறு அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று சென் கூறினார்.

  உணர்ச்சிகள், நம்பிக்கையுடன் இப்பிரச்னை பிணைக்கப்பட்டுள்ளது என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai