சுடச்சுட

  

  06.05.1962 - காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதியே: ஐ.நா. சபையில் பாகிஸ்தான் படுதோல்வி; சீனாவின் 'மூக்கை' ரஷியா உடைத்தது

  By DN  |   Published on : 30th April 2016 02:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஐ.நா. பந்தோபஸ்து சபையில் காஷ்மீர் விவாதம் ஒத்திவைப்பு பற்றி பாகிஸ்தான் வருத்தம், எரிச்சல் அடைந்தது. மேலும், இந்திய பாதுகாப்பு மந்திரி கிருஷ்ண மேனன் நிதானம் இழக்கவில்லை. அவருடைய வாதத்திறமைக்குப் பாராட்டும் கிடைத்தது.

  காஷ்மீர் விவாதத்தை பந்தோபஸ்து சபை ஒத்திவைத்த முறையைக் கண்டு பாகிஸ்தானுக்கு வருத்தமும் எரிச்சலும் ஏற்பட்டிருக்கின்றன. ஆகவே பாகிஸ்தானுக்கு படுதோல்வி ஏற்பட்டுவிட்டது.

  பந்தோபஸ்து சபையின் மற்ற உறுப்பினர்களையும், கூட்டத்தில் கலந்து கொண்ட பிறரையும் கலந்து ஆலோசனை செய்துவிட்டு அடுத்த கூட்டத்திற்குத் தேதியை நிர்ணயிப்பதாக சபைத் தலைவர் ஸியாங் கூறினார்.

  வாதங்களில் மிகவும் திறமை வாய்ந்தவர் என்று கிருஷ்ணமேனனுக்குப் புகழ் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பிரதிநிதி அவருக்குப் பன்முறை ஆத்திரமூட்டுவதற்கு முயன்று பார்த்தார். ஆனால் மேனன் நிதானம் இழக்கவே இல்லை.

  பந்தோபஸ்து சபையின் ஒரு மெம்பர் நாட்டின் மனம் நோகும்படியான ஒரு வார்த்தை கூட மேனனின் நாவிலிருந்து விழவில்லை.

  மேலும் காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதியே என்று ஐ.நா. பந்தோபஸ்து சபையில் சோவியத் ரஷியா அறிவித்ததன் மூலமாக, சீனாவின் மூக்கை உடைத்திருப்பதாக இந்திய அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai